மனித உயிரின் மதிப்பு என்பது அந்த மனிதன் வாழும் நாட்டை பொறுத்தது போலும். 20 நாட்களாக படுகொலைகள் தொடர்கின்றது. ஒவ்வொரு நாளும், இறந்தவர்களின் எண்ணிக்கை 100- ந் மடங்காக பெருகிக் கொண்டே செல்கின்றது. அந்த மக்களுக்காக, அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வரைமுறையற்ற வன்முறையை தட்டிக் கேட்க அல்ல, அதை வன்மையாக கண்டிக்கக் கூட இங்கு குரல்கள் எழவில்லை.
தீவிரவாதத்திற்கு எதிரான போராம்.... உலகிற்கு மனித வெடிகுண்டுகளை அறிமுகப்படுத்திய இஸ்ரேலியர்கள் கூறுகின்றனர். உணவில்லாமல், மருந்தில்லாமல் ஒரு நாட்டையே, ஒரு சமூகத்தையே பட்டினி போட்டு மூளைச் சலவை செய்ய இயலும் என்று எண்ணுவது தப்புக் கணக்கு என்பது "புத்திசாலி" இஸ்ரேலியர்கள் அறியாத ஒன்றல்ல. "கிடைத்த வரை லாபம்" என்பது போல, "ஒரு பாலஸ்தீனியன் இறந்தால் ஒரு எதிரி குறைந்தான்" என்ற ரீதியில் தான் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இப்போதுள்ள நிலமைக்கு, மறுபடியும் தேர்தல் நடந்தால் Hamas தான் மறுபடியும் வெற்றி பெறும். ஒபாமா, தான் முதலில் ஒரு அமெரிக்க (எதிர்கால) அதிபர் என்பதை நிரூபித்து விட்டார். படுகொலை முடியும் நாள் புலப்படவில்லை. இன்னும் எத்தனை அப்பாவிகள் இரத்தம் சிந்த வேண்டுமோ? வாழ வழியில்லையென்றால் மூலைக்கு தள்ளப்பட்ட எலியும் போராட துணியும். மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் கூட.
i took nearly 15min 2 read dis article coz of my bad tamil.This s wat d world has been talkin abt for d past few weeks bt doin nthin....lets pray n hope 4 smthin better..
ReplyDelete