Tuesday, January 20, 2009

உன் வாழ்வில் உள்ள பெண்

I came across this article and thought of sharing

எண்ணம்: யாரோ

தமிழாக்கம்: அடியேன்

************************************************************************************

வேலைக்கு செல்லும் பெண் நாளை உனக்கு கிடைக்கலாம், அவளை மணக்கும் முன் நீ இந்த உண்மைகளை அறிய வேண்டும்.

இந்த பெண் உன் அளவிற்க்கு படித்தவள்; நீ பெறும் ஊதிய அளவிற்க்கு அவளும் சம்பாதிப்பவள்;

அவளும் உன்னைப் போன்றே மனிதம் என்பதால் உன்னைப் போலவே அவளுக்கும் கனவுகளும், குறிக்கோள்களும் உண்டு;

சமையல் கலையின் திறமைகளுக்கு எந்த சலுகையும் வழங்காத நம் சமூகத்தில், படிப்பு ஒன்றே ஆதாரம் என்ற சூழலில் படித்ததால் உன் தங்கையைப் போன்று, உன்னைப் போன்று அவளும் சமையலறைப் பக்கம் எட்டிப் பார்த்ததில்லை.

உன்னைப் போன்றே அவளும் தன் வாழ்கையின் 20- 25 வருடங்களை தன் பெற்றோருடன், தன் சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்தவள், அவர்களை நேசித்தவள்;

மன தைரியத்துடன் அவற்றையெல்லாம், தன் வீடு, தன் பந்தம், தன் குடும்பம் விட்டு விலகி வந்து உன் வீடு, உன் குடும்பம், உன் பழக்க வழக்கங்கள், உன் குடும்ப பெயர், இவற்றை ஏற்றுக்கொள்ள இருப்பவள்.

நீ உறங்கிக் கொண்டிருந்திருப்பாய்....., வந்த முதல் நாளில் இருந்தே மிகச் சிறந்த சமையல் ராணியாக ஜொலிக்க வேண்டிய கட்டாயத்தில், புது அமைப்பு, புது சூழல் இவற்றில் தவிக்கும் அவளது அவஸ்தைகள் புரியாமல்.

காலையில் முதல் வேளையாக அவள் டீ போட வேண்டும், மாலையில் சமைக்க வேண்டும், அவள் உன்னை போல அல்லது உன்னை விட களைப்பாக இருந்தாலும், எந்த வித சலிப்பும் காட்டாமல்;
அவளுக்கு வேண்டாமென்றாலும், ஒரு வேலைக்காரியாக, ஒரு சமையல்காரியாக,ஒரு தாயாக, ஒரு மனைவியாக இருக்க;

அவளிடமிருந்து உனக்கு என்ன வேண்டும் என நீ கற்றுக் கொள்வது போல அவளும் கற்றுக் கொள்ள இருக்கிறாள்; சில நேரங்களில் நேர்த்தியில்லாமல் இருக்கும் அவளுக்கு அதிகமான வேண்டல்(கோரிக்கைகள்) இருந்தால் உனக்கு பிடிக்காது எனவும் தெரியும்; அத்துடன் உன்னை விட அவள் வேகமாக கற்றுக் கொண்டாலும்.

அவளுக்கும் நட்பு வட்டம் உண்டு; அதில் யுவன்களும், பணியிட ஆண்களும், பள்ளிக்கூட நண்பர்களும் இருக்கலாம்; இருப்பினும், உன் காரணமற்ற பொறாமை, தேவையற்ற போட்டி மனப்பாங்கு, உள்ளுள்ள பாதுகாப்பின்மை, இவற்றை தவிர்க்க அவள் அந்த நட்புக் கூட்டத்தை புறந்தள்ளவும் தயாராக இருப்பாள்.

அவளுக்கு உன்னைப் போலவே நன்றாக நடனமாட தெரியும்; உனக்கு பிடிக்கும் என நீ சொன்னாலும் அவள் ஆட மாட்டாள், உனக்கு பிடிக்காது என அறிந்ததால்.

அவள் அலுவலகம் முடித்து திரும்ப சில நாட்கள் தாமதம் ஆகலாம்; உன்னைப் போலவே அவளுக்கும் பணியிட அழுத்தங்கள் உண்டென்பதால்;

அவள் தன்னால் முடிந்த சிறந்ததை தருகின்றாள், தன் வாழ்க்கையின் முக்கியமான இந்த உறவு மகத்தான வெற்றி பெற; நீ அவளுக்கு சிறிது உதவினால், நம்பினால்.

அவளுக்கு அந்த வீட்டில் தெரிந்த ஒரே நபர் நீயென்பதால், அவள் உன்னிடம் வேண்டுவது ஒன்றே ஒன்று தான் - உன் தளராத ஆதரவு, உன் உண்ர்ச்சித்தாங்கல்கள் மற்றும் முக்கியமாக உன் புரிதல்.....காதல் என்றும் அழைக்கலாம்.

ஆனால், நிறைய இளைஞர்களுக்கு இது புரிவதில்லை.

தயவு கூர்ந்து அவளை மதியுங்கள்.

நீ செய்வாய் என நம்புகிறேன்.

2 comments:

  1. Dear Ashik, Though I have read it in English, that was an excellent translation in Tamil. Keep it up. Ashikkukkul evvalavu thiramai iruppathu ippodhuthan (enakku) therigirathu.
    Ramesh.

    ReplyDelete
  2. tamizhakkam ellam nalla than irukku. veetlu adhu mathiri thana illa oorukku mattum ubathesama? nalaikku kalayila neenga than tea podanum. I'll confirm through Hasee

    PORKODI BALAJI

    ReplyDelete