வலைப்பதிவிற்க்கு விஜயம் செய்து கருத்துக்களை பதிவு செய்த நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பள்ளிக்கூட நாட்களில் 'இயந்திர வாழ்க்கை' என்ற வார்த்தையை கடந்த போதெல்லாம் புரியாத அதன் பொருள், வாழ்க்கை மையப் பகுதியில் நிலை கொண்டுள்ள போது...புரிய மட்டுமல்ல, உணரவும் முடிகின்றது. பள்ளியிலும், சிறிது காலமே கிடைத்த கல்லூரி வாழ்க்கையிலும் என் வாழ்வை வசந்தமாக்கிய நட்பு மலர்களை என்றுமே மறக்க இயலாது. அந்த உறவுகளை சந்திக்க அல்ல..நினைக்க கூட நேரம் இல்லாமல் பொருள் தேடி ஓடும் அவலத்தை எண்ணும் போது, நான் விரும்பிய இலட்சிய வாழ்க்கை இது தானா என்று என் மனக்குரல் கேலி செய்கின்றது. நட்பைப் பற்றி எனக்கு வரும் குறுந்தகவல்கள் போற்றும் அளவுக்கு நான் நட்புக்கு மரியாதை செய்தேனா என்பது கேள்விக்குறி தான். பாலைவனத்தின் சுவர்ணங்கள் போல என்னிடம் எஞ்சியுள்ள நட்பை எண்ணிப் பார்க்கவும் போற்றவும் பாதுகாக்கவும் விழைந்ததால் ஏற்ப்பட்ட முயற்சி தான் இந்தப் பதிவு.
Subscribe to:
Post Comments (Atom)
i didnt understand.can u translate it in english?
ReplyDelete